மேட்டுப்பாளையம் - காரமடை ரோடு, காந்திநகரில், "பிருந்தாவன் வித்யாலயா' என்ற சி.பி.எஸ்.இ., பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் 300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில் இருந்த,ஆவனங்கள் மர்மமான முறையில் கிழிந்திருந்தது. இதை, நான்காம் வகுப்பு மாணவ, மாணவியரில் ஒருவர்தான் கிழித்திருக்க வேண்டும் என்று, ஆசிரியைகள் சந்தேகமடைந்தனர். விளையாட்டு ஆசிரியர் சதீஷ்குமாரை அழைத்து, குழந்தைகளை விசாரிக்குமாறு கூறியுள்ளனர். இவர், வகுப்பு அறையில் வைத்து குழந்தைகளை விசாரித்துள்ளார். தாங்கள் யாரும் ரெக்கார்டை கிழிக்கவில்லை என்று கூறி குழந்தைகள் அழுதன. ஆத்திரமடைந்த ஆசிரியர் சதீஷ்குமார் 17 மாணவர்கள், 7 மாணவியரை விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்று வெயிலில் நிற்க வைத்துள்ளார். இரு கைகளையும் மேல்நோக்கி தூக்கி நிற்குமாறு கூறி, குழந்தைகளின் பின்பகுதி யில் பிரம்பு, பி.வி.சி., பைப் கொண்டு ஆத்திரம் தீர வெளுத்துள்ளார். போலீஸ் பாணியில் குற்றவாளிகளை விளாசுவது போல் தாக்கியுள்ளார். குழந்தைகள் துடிதுடித்து கதறி அழுதுள்ளனர். பின்பகுதியில் உள்காயம், ரத்தக்கட்டு ஏற்பட்டு நடக்கக்கூட முடியாதவகையில் குழந்தைகள் தவித்துள்ளனர்.
மாலையில் குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு பதறினர். அடிதாங்க முடியாமல் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் நேற்று காலை பள்ளிக்கு வந்து, கொடூர ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகிகளில் ஒருவரான வக்கீல் சம்பத்குமார் கூறுகையில், ""விளையாட்டு ஆசிரியர் இப்படி அடித்த விவரம் எங்களுக்கு தெரியாது என்றும். குழந்தைகளை நேரில் பார்த்த பிறகு உடனடியாக அந்த ஆசிரியரை டிஸ்மிஸ் செய்து விட்டதாக கூறியிருக்கிறார். என்று தான் இது போன்ற சம்பவங்களுக்கு முடிவு வருமோ....?
வெளுத்துக்கட்டு
Posted by
சிவந்த கண்கள்
on Saturday, December 11, 2010
Labels:
அத்துமீறல்,
அராஜகம்,
கொடுமை
/
Comments: (0)