RSS
Write some words about you and your blog here

விடுதலை

 காவிரி தண்ணீர் பங்கீடு குறித்து இறுதி தீர்ப்பு வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுகுறித்த மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. கோர்ட்டில் பிரச்னை இருந்தாலும்கூட, இறுதி தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடுவதில் எந்த தடையும் இருக்கப் போவதில்லை. ஆனாலும் இந்த தீர்ப்பை அமல்படுத்தக் கோரியோ அல்லது தீர்ப்பை கெஜட்டில் வெளியிடக் கோரியோ தீவிரமான அழுத்தம் தமிழகம் தரப்பில் இருந்து டில்லிக்கு அளிக்கப்படவில்லை.இதனால் காவிரி நீர் பகிர்வு என்றாலே, 1991ம் ஆண்டு இடைக்கால தீர்ப்பில் என்ன கூறப்பட்டதோ அதை வைத்தே இப்போது பேசப்பட்டு வருகிறது. தீர்ப்பின்படி ஜூன் முதல் செப்டம்பர் வரை 137 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு தர வேண்டும். ஆனால் இதுவரை வெறும் 61 டி.எம்.சி., மட்டுமே வந்துள்ளது. தமிழகத்துக்கு தர வேண்டிய பாக்கி 76 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகம் தராமல் இழுத்தடிக்கிறது.

மழை பெய்யவில்லை என்ற கர்நாடகாவின் வாதத்தை மட்டுமே மத்திய அரசு நம்புகிறது.ஆனால் கர்நாடகாவில் இருந்து வெளியாகும் நாளிதழான "டெக்கன் ஹெரால்டு' ஆங்கில நாளிதழில் கடந்த 4ம் தேதி அம்மாநில அணைகளின் நீர்மட்டம் குறித்து செய்தி வெஈயிட்டுள்ளது. அதன்படி 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையில் 120.60 அடி வரை நீர் உள்ளது.

கபினியின் மொத்த உயரம் 2,284 அடி. நீர் இருந்த அளவு 2,274 அடி. ஹேமாவதியின் மொத்த உயரம் 2,924 அடி. நீர்  அளவு 2,917 அடி. ஹாரங்கி அணையின் மொத்த உயரம் 2,859 அடி. நீர் அளவு 2,857.4 அடி.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான சிக்மங்களூரில் 15 செ.மீ., மழையும், ஹாசனில் 7 செ.மீ., மழையும், மைசூரில் 3 செ.மீ., மழையும் மாடிகனியில் 6.2 செ.மீ., மழையும் பெய்துள்ளது. இப்படி எல்லா அணைகளிலும் ஏறத்தாழ முழு கொள்ளளவில் தண்ணீரை நிரப்பி வைத்துக் கொண்டே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடகம் உள்ள நிலையில் இழுத்து அடித்து வருகிறது.

தண்ணீர் திறந்துவிடுவதில் கர்நாடகம் தாமதம் செய்ய ஆரம்பித்தால், தமிழகத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி குறைந்துபோனதை போலவே சம்பா சாகுபடியும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் எப்போதும் குறுவை சாகுபடியில் 4.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வெறும் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குறுவை நெல் பயிரிடப்பட்டது. வழக்கமாக குறுவை சாகுபடியின் போது 10 லட்சம் டன் வரை நெல் உற்பத்தி செய்யப்படும். ஆனால் இரண்டு லட்சம் டன் நெல் மட்டுமே இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டது.சம்பா சாகுபடியும் 14 லட்சம் ஏக்கரில் பயிரிடப்படுவது வழக்கம். மேட்டூரில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் இந்த ஆண்டு இந்த அளவு பரப்பளவில் நெல் பயிரிடப்படுமா என்பது சந்தேகம்.

நிலைமை இவ்வாறு இருக்க பிரச்சனையை திசை திருப்ப தமிழக முதல்வர் என்னவோ திடீர் அன்பு கொண்டு இலங்கையில் முகாம்களில் இருக்கும் ஈழ தமிழர்கள் மீள் குடியேற்றம் விரைவில் நடைபெற இலங்கையை வற்புறுத்த வேண்டும் என  தமிழகம் வந்த சோனியாவிடம் விமான நிலையம் சென்று வரவேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார் தமிழ் நாட்டு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு காவிரியில் தண்ணீர் திறந்து விட மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தாலும் விவசாயிகளுக்கு ஏதுவாக இருக்கும். காலம் காலமாக தமிழக டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வரும் கழக அரசுகளிடமிருந்து என்று தான் தமிழகத்திற்கு விடுதலை கிடைக்குமோ....?

0 comments:

Post a Comment