கிருஷ்ணகிரி அருகே பள்ளி பேருந்து மோதியதில் மாணவன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்துள்ளான் இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் பெற்றோர் திரண்டு வந்து, பள்ளிக்கு தீ வைத்து கொளுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தர்மபுரி பிரதான சாலையில் அண்ணா அறிவகம் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1000க்கும் அதிகமானோர் படிக்கின்றனர். 3 நாட்கள் விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும், சுரேஷ் (14) என்ற மாணவன் மிதிவண்டியில் பள்ளிக்கு வந்துள்ளான். பள்ளி வாயில் அருகே வந்தபோது, அரசம்பட்டியில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வந்த அதே பள்ளியின் பேருந்து, மாணவன் மீது மோதியது. இதில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய சுரேஷ், உடல் நசுங்கி மூளை சிதறி அதே இடத்திலேயே இறந்துள்ளான். பேருந்து ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். இதை அறிந்த ஊர் மக்கள் மற்றும் பெற்றோர் ஆத்திரமடைந்த அவர்கள், மாணவர்களை பள்ளி வளாகத்தை விட்டு வெளியே அனுப்பிவிட்டு, பள்ளிக்கு தீ வைத்தனர். அங்கிருந்த தாளாளர் கார், பள்ளி பேருந்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மக்களை சமாதானப்படுத்தியுள்ளனர். பள்ளி மாணவன் பலியான சம்பவத்தை அடுத்து, பள்ளி வாகனங்கள் அனைத்தும் மோட்டூரில் உள்ள தாளாளர் வீட்டில் கொண்டு போய் நிறுத்தப்பட்டு உள்ளது இதையறிந்த மக்கள் அங்கும் திரண்டு சென்று, தாளாளர் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். அங்கிருந்த பேருந்துகளையும் அடித்து உடைத்துள்ளனர். ஓர் உயிர் விலை மதிபற்றது தான் இல்லை என்று யாரும் மறுக்க முடியாது அதற்க்காக கோபமடைந்து அனைத்தையும் அடித்து நொறுக்கினால் அந்த உயிர் திரும்ப கிடைக்குமா என்ன...? பள்ளி மற்றும் பேருந்துகளை தீ வைத்து கொளுத்தியிருக்கிறார்கள். அசம்பாவிதமாக மீண்டும் தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவம் போல் நடந்து அதில் ஒரு உயிர் பலியாகியிருந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்...? இதே போன்று ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மேல் மக்கள் கோபம் கொள்வதில்லை அப்படி கோவப்பட்டிருந்தால் இன்று சுவிஸ் வங்கிகளில் இத்தனை கோடான கோடி பணம் தூங்கி கொண்டிருக்காது.
0 comments:
Post a Comment