RSS
Write some words about you and your blog here

தண்டனை

மும்பையின் கொலாபா பகுதியில் கட்டப் பட்டு வருகிற ஆதர்ஷ் ஹவுசிங் சொசைட்டி என்ற 31 தளங்கள் கொண்ட அதி நவீன அடுக்கு மாடிக் கட்டடம்தான் பிரச்சனையின் மையம். அந்தக் கட்டடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட தில் நடந்துள்ள முறைகேடுகள் ஒரு சூறாவளி யாக மாநில காங்கிரஸ் அரசைப் புரட்டிக்கொண் டிருக்கின்றன.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் ஊழல் விவகாரங்கள் எவ்வித உறுத்தலையும் ஏற்படுத்துவதில்லை என்பதுதான் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முறைகேடுகள் உள்பட நாட்டின் அனுபவம். ஆனால், முதலில் 50 வீடு களுடன் 6 மாடிக் கட்டடத்திற்கான அனுமதியுடன் 2003ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 31 மாடிக் கட்டடமாக மாற்றப்பட்ட பிரச்சனையில் முட்டிக்கொண்டிருப்பது எத்தனை கோடி ரூபாய் கைமாறியது என்ற லஞ்ச லாவண்யம் மட்டுமே அல்ல; முதலமைச்சரின் உறவினர்களுக்கும் சில காங்கிரஸ் தலைவர்களுக்கும் அந்தக் கட்டடத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல் மட்டுமே அல்ல.

இயற்கைச் சமநிலை, சுற்றுச் சூழல் விதிகள் ஆதர்ஷ் அத்துமீறலுக்காகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. அடிக்கடி புயல் பாதிப்புக்கு உள்ளாகும் மும்பை போன்ற நகரங்களின் மக்களுக்கு, இயற்கையைப் பகைக்கும் வன்முறையாகி யுள்ள இப்படிப்பட்ட கட்டடங்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

முக்கியமான பிரச்சனை, இந்தத் திட்டம் யாருக்காகத் தொடங்கப்பட்டு பின்னர் தடம் மாற்றப்பட்டது என்பது. 11 ஆண்டுகளுக்கு முன், தீவிரவாதிகளோடு சேர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் இமயத்தின் கார்கில் பனிமலையை ஆக்கிரமித்தனர். அதை முறியடித்த போரில் இன்னுயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு நாட்டின் நன்றிக்கடனாக, அவர்களது மனைவிமார்களுக்கு வீடு வழங்கவே ஆதர்ஷ் திட்டம் உரு வாக்கப்பட்டது. பின்னர், மற்ற ராணுவ அதிகாரி களுக்காகவும் என்று விரிவுபடுத்தப்பட்டது. அதற்குப் பின், ராணுவத்தினர் அல்லாதவர்களுக் காகவும் என்று மாற்றப்பட்டது. வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலியாகத் தொடங்கப்பட்ட திட்டம், அப்பட்டமான வியாபாரத் தளமாகக் கொச்சைப்படுத்தப்பட்டது.

எந்த அளவிற்கு காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மனசாட்சியைத் துடைத்தெறிந்தவர்களாக, அரசுப் பதவியை சுயநலத்திற்குப் பயன்படுத்து கிறவர்களாக இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் மேலும் பளிச்செனத் தெரிகிறது. ஆதர்ஷ் மட்டுமல்லாமல் புனே நகரின் லவாசா அடுக்கு மாடிக் கட்டடம் உள்ளிட்ட பல திட்டங்கள் இவ்வாறு விதிமுறைகளைக் குழியில் தள்ளி கட்டப் படுபவையே என்றும் தகவல்கள் வந்துள்ளன. இந்தப் பின்னணியில் காங்கிரஸ் தலைமை உறுதியான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லையேல், தவறு செய்ததற்குத் தண்டனை என்பதைவிட, மாட்டிக்கொள்ளாமல் அந்தத் தவறைச் செய்யத் தவறியதற்காகவே தண்டனை என்ற மக்களின் குற்றச்சாட்டிலிருந்து தப்ப முடியாது.

ஆயிரத்தில் ஒருவன்



0 comments:

Post a Comment