RSS
Write some words about you and your blog here

பிச்சை பாத்திரம்

உலக வங்கி, இந்தியாவுக்கு ரூ.43,000 கோடி கடன் வழங்க, சென்ற 2009-10-ஆம் நிதி ஆண்டில் ஒப்புதல் அளித்தது. அந்த நிதி ஆண்டில், உலக வங்கியிலிருந்து அதிக கடன் பெறுவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலக வங்கி அதன் ஐ.பீ.ஆர்.டீ. மற்றும் ஐ.டீ.ஏ. ஆகிய அமைப்புகளின் வாயிலாக உலக நாடுகளுக்கு கடன் வழங்குகிறது. இதில் ஐ.பீ.ஆர்.டீ., வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக கடன் வழங்கி வருகிறது. இது, இந்தியாவிற்கு ரூ.31,500 கோடி கடன் வழங்க முடிவு செய்துள்ளது. இது, இந்த அமைப்பு உலக நாடுகளுக்கு வழங்கும் மொத்த கடனில் 15.1 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக மெக்சிகோ 640 கோடி டாலர், தென் ஆப்பிரிக்கா 380 கோடி டாலர், பிரேசில் 370 கோடி டாலர் ஆகிய நாடுகள் முறையே 2, 3 மற்றும் 4 -வது இடங்களில் உள்ளன. இந்த அமைப்பு, சென்ற நிதி ஆண்டில் இந்தியாவுக்கு ரூ.11,500 கோடி  கடன் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பிடமிருந்தும் இந்தியாதான் அதிக கடன் பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற நிதி ஆண்டில், உலக வங்கியிடமிருந்து இந்தியா மொத்தம் ரூ.21,600 கோடி கடன் பெற்றுள்ளது. அந்த நிதி ஆண்டில், உலக வங்கி, இந்தியாவிற்குத்தான் அதிக கடன் வழங்கி உள்ளது. அதேசமயம், ஆசிய மேம்பாட்டு வங்கியிடமிருந்து அதிக கடன் பெற்றுள்ளதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடன் பெறுவதில் ஆசியாவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவிலிருந்து அதிக நிதி உதவி பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 27-வது இடத்தில் உள்ளது. இப்படி உலகநாடுகளிடமும் உலக வங்கியிடமும்  பிச்சை பாத்திரம் ஏந்தி ஏந்தி பிச்சை வாங்கி வாங்கி ஆட்சி செய்பவர்கள் ஊழல் செய்து சுவிஸ் வங்கிகளில் தூங்கசெய்கின்றனர் என்பதே உண்மை 

1 comments:

சி.பி.செந்தில்குமார் said...

சமூக அக்கறை சார்ந்த பதிவு,வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

சமூக அக்கறை சார்ந்த பதிவு,வாழ்த்துக்கள்

Post a Comment