தீப்பெட்டியில் குச்சி உரசுவது போல் சர்வசாதரணமாக இன்று மனித உயிர்களை கொலை செய்வது சர்வசாதரணமாகி விட்டது அதுவும் அற்ப காரணங்களுக்காக கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. நெல்லையில் தன் உடன் படிக்கும் சக மாணவன் தன் பெரியப்பா மகளான அக்காவை காதலித்ததால் ஆத்திரமுற்ற அண்ணனும் சகமாணவர்களும் சேர்ந்து இசக்கி முத்து என்ற சகமாணவனை குத்திகொலைசெய்து ஆற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.போலிசார் தேடுவதை அறிந்து ,மூவரும் சரணடைந்துள்ளன்ர். மூவருக்கும் வயது 17 தான் என்பது குறிப்பிடத்தக்கது திரைபடங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் வன்முறை காட்சிகள் சென்சார் செய்யபடாமல் ஒளிபரப்பபடுகிறது தொலைகாட்சிகளில் கொலை செய்வது போன்ற காட்சிகள் மிககொடுரமாக காட்டபடுகிறது. தொடர்ந்து இது போல வன்முறை காட்சிகள் வரமுறையின்றி காட்டப்படுமேயானால் இளம் சமுதாயத்தினர் ரத்த வெறி பிடித்து இப்படி தான் சீரழிந்து போவார்கள்
0 comments:
Post a Comment